2025 ஜூலை 26, சனிக்கிழமை

அரையிறுதியில் யுபுன் அபேயக்கோன்

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 100 மீற்றர் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கையின் யுபுன் அபேயக்கோன் தகுதி பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆறாவது தகுதிகாண் போட்டியில் 10.06 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்தே அரையிறுதிப் போட்டிக்கு அபேயக்கோன் தகுதி பெற்றுள்ளார்.

இலங்கை நேரப்படி நாளை இரவு 11.40 மணிக்கு அரையிறுதியும், நாளை மறுதினம் அதிகாலை 2 மணிக்கு இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி வரையில் 31 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள், 20 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 71 பதக்கங்களுடன் தொடர்ந்தும் பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

21 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 55 வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நடாத்தும் நாடான இங்கிலாந்து இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. 13 தங்கப் பதக்கங்கள், ஏழு வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கமென மொத்தமாக 24 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் நியூசிலாந்து காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X