Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக, ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறான மாற்றங்களை ஏற்படுத்திய இக்குழாம், 15 வீரர்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
இதுவரை காலமும் அணித்தலைவராக இருந்த ஆரொன் பின்ச், தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், இக்குழாமில் இடம் பிடித்தார். எனினும், டெஸ்ட் அணியின்நிரந்தரச் சுழற்பந்துவீச்சாளரான நேதன் லையனுக்கு, இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை. தவிர, ஷோன் மார்ஷ், மத்தியூ வேட், கமரோன் போய்ஸ் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை.
காயமடைந்துள்ள வீரர்களான நேதன் கோல்ட்டர் நீல், ஜேம்ஸ் போக்னர் ஆகியோர், இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்கள் குழாமுக்கு மேலதிகமாக, பெண்கள் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் குழாம்: ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், அஷ்டன் ஏகர், நேதன் கோல்ட்டர் நீல், ஆரொன் பின்ச், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஜொஷ் ஹேஸ்டிங்ஸ், ஜேம்ஸ் போக்னர், உஸ்மான் கவாஜா, மிற்சல் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், பீற்றர் நெவில், அன்ட்ரூ டை, ஷேன் வொற்சன், அடம் ஸாம்பா.
பெண்கள் குழாம்: மெக் லனிங், அலெக்ஸ் பிளக்வெல், கிறிஸ்டன் பீம்ஸ், லோரன் சீட்டில், சாரா கோய்ட், றெனே பரல், ஹோலி பேர்லிங், கிரேஸ் ஹரிஸ், அலைஸா ஹீலி, ஜெஸ் ஜொனசென், பெத் மூனி, எரின் ஒஸ்போர்ன், எலைஸ் பெரி, மேகன் ஸ்கட், எலைஸ் வில்லானி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .