2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய இருபதுக்கு-20 குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதினேழு பேர் கொண்ட குழாமாகே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பிக் பாஷ் லீக்கில் பேர்த் ஸ்கோச்சேர்ஸுக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் அன்ரூ டையே மற்றும் பிரிஸ்பேர்ண் ஹீட்டுக்காக விளையாடும் ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் முதற்தடவையாக அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளதோடு, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் ஸ்கொட் போலன்டும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

தவிர, ஐந்து வருடங்களுக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஷோர்ன் டைட் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளரான நேதான் லைனும் குழாமில் இடம்பெற்றுள்ளார். இது தவிர இந்தியாவுடனான சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் இடம்பெறாத சிரேஷ்ட சகலதுறைவீரர் ஷேன் வொற்சன், மேற்படிக் குழாமில் இடம்பெற்றுள்ளார். தவிர, அவுஸ்திரேலியாவுக்காக இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்ற கிறிஸ் லைன்னும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் பெய்லி மற்றும் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, இந்தியாவுக்கெதிரான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமிலும் நேதன் லைன் இடம்பெற்றுள்ளதோடு, தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க, விடுமுறையில் சென்றிருந்த டேவிட்  வோணர் குழாமுக்கு திரும்பியுள்ளார். இதேவேளை, குழாமில் ஏற்கெனவே இருந்த ஜோயல் பரிஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருபதுக்கு-20 குழாம்-ஆரோன் பின்ஞ் (தலைவர்), டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், ஷேன் வொற்சன், கிளென் மக்ஸ்வெல், மத்தியூ வேட், ஜேம்ஸ் போக்னர், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஷோன் மார்ஷ், கமரூன் போய்ஸ், நேதன் லையன், கிறிஸ் லைன், ட்ரவிஸ் ஹெட், கேன் றிச்சர்ட்சன், அன்ரூ டையி, ஸ்கொட் போலன்‌ட், ஷோன் டெய்ட். 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .