Shanmugan Murugavel / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தரப்படுத்தலில் இரண்டாமிடத்திலுள்ள அவுஸ்திரேலிய அணி, இந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் கூட, தரப்படுத்தலில் முதலாவது இடத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை காணப்படுவதால், முக்கியமான தொடராக அமைந்துள்ளது.
அத்தோடு, மிற்சல் ஜோன்சனின் ஓய்வு, மிற்சல் ஸ்டார்க்கின் உபாதை ஆகியவற்றின் காரணமாக, பந்துவீச்சாளர்களைத் தெரிவுசெய்வதில் அவுஸ்திரேலியா, புதுமுகங்களை உள்வாங்க வேண்டியேற்பட்டது. இதன்படி, அண்மைக்காலமாக குழாமில் இடம்பிடித்திருக்காத ஜக்ஸன் பேர்ட், புதுமுக வீரரான சட் சேயர்ஸ் ஆகியோர், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய குழாம்: ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர்சன் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன், சட் சேயர்ஸ், ஜக்ஸன் பேர்ட்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026