Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் தேசிய றக்பி லீக் தொடரில், போட்டி நிர்ணயங்கள் இடம்பெற்றன என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்துவருவதாக, அவுஸ்திரேலியப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சிட்னியை மையமாகக் கொண்ட 'மான்லி சீ ஈகிள்ஸ்' அணி பங்குபற்றிய இரண்டு போட்டிகளே, இவ்வாறு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. தென் சிட்னி றபிடோஸ், பரமட்டா ஈல்ஸ் ஆகிய அணிகளுக்கெதிராக, கடந்தாண்டு இடம்பெற்ற போட்டிகள் குறித்தே, சந்தேகம் எழுந்துள்ளது.
"தேசிய றக்பி லீக் தொடரில் போட்டி நிர்ணயங்கள் இடம்பெற்றன என்பது தொடர்பான தகவல் தொடர்பாக, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என, நியூ சௌத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேசிய றக்பி லீக், அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரரான றயன் டென்டி, தேசிய றக்பி லீக் போட்டிகளில் கன்டெர்பெரி புல்டோக்ஸ் அணிக்காக விளையாடும்போது, போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டில் ஆயுட்காலத்துக்கும் தடை விதிக்கப்பட்டார். பின்னர் அவர், 2014ஆம் ஆண்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .