2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு இனிங்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்ற இப்போட்டியில், 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 327 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வியடைந்தது. 8 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதிநேரத் துடுப்பாட்ட வீரர்களால், 300 ஓட்டங்களைப் பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் டொம் லேதம் 63, ஹென்றி நிக்கலஸ் 59, டிம் சௌதி 48, மார்ட்டின் கப்டில் 45, மார்க் கிறெய்க் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் லையன் 4, மிற்சல் மார்ஷ் 3, ஜொஷ் ஹேஸல்வூட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி தனது முதல் இனிங்ஸில், அடம் வோஜஸின் இரட்டைச் சதம், உஸ்மான் கவாஜாவின் சதம் ஆகியவற்றின் உதவியுடன், 562 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக, அடம் வோஜஸ் தெரிவானார்.

இத்தொடரை 2-0 அல்லது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைக் கைப்பற்ற முடியுமென்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி, இத்தொடரில் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .