2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 08 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

கயானாவிலுள்ள புரொவிடென்ஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. 6 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணிக்கு, இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடிய பர்ஹான் பெஹர்டியன், ஓரளவு போட்டியிடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை வழங்கினர். பெஹர்டியன் 62, ஹஷிம் அம்லா 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் கூல்ட்டர்நைல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 34.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஓவரிலேயே டேவிட் வோணரை இழந்த அவுஸ்திரேலியா, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக ஆரொன் பின்ச்சை 9ஆவது விக்கெட்டாக இழந்தபோது, 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இறுதியில் நேதன் லையன் சிறப்பான விளையாடியிருந்த போதிலும், போனஸ் புள்ளியுடன் கூடிய வெற்றியை தென்னாபிரிக்கா பெறுவதைத் தடுக்க முடிந்திருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் ஆரொன் பின்ச் 72, நேதன் லையன் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கஜிஸ்கோ றபடா 3, வெய்ன் பார்ணெல், இம்ரான் தாஹிர், ஆரொன் பங்கிசோ மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, பெஹர்டியன் தெரிவானார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .