Shanmugan Murugavel / 2016 ஜனவரி 13 , மு.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட விளையாடி வருகிறது. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை (12), பேர்த்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (15), பிரிஸ்பேர்னில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இன்னொரு சகலதுறை வீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தற்போது, இரண்டாவது போட்டிக்கும் மட்டும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இவர், குழாமில் எவரும் காயமடையும் சந்தர்ப்பத்தில் குழாமில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக குழாமிலிலுள்ள மற்றைய வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனே அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணரின் மனைவி கன்டிஸ், தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ள நிலையில், அவருக்கு அருகில் இருக்கும் பொருட்டு, விடுமுறை பெற்று வோணர் செல்கின்றார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக, இரண்டாவது, மூன்றாவது போட்டிகளுக்கான குழாமில் உஸ்மான் கவாஜா குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும் அணியில், குழாமில் மேலதிகத் துடுப்பாட்ட வீரராக உள்ள ஷோர்ன் மார்ஷே பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .