Shanmugan Murugavel / 2026 ஜனவரி 28 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், நான்காம் நிலை வீராங்கனையான அமன்டா அனிசிமோவா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீராங்கனையான எலெனா றைபகினாவை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடென், 5-7, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை தனது காலிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் அனிசிமோவா, 2-6, 6-7 (1-7) என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதுதவிர தனது காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான லொரென்ஸோ முஸெட்டியை எதிர்கொண்ட நான்காம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் 4-6, 3-6, 3-1 என்ற ரீதியில் பின்தங்கியிருந்தபோதும், இத்தாலியின் முஸெட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருந்த நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் முன்னேறினார்.
4 minute ago
10 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
27 minute ago