2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் ஸ்டொய்னிஸ்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இடம்பெற்றுள்ளார்.

ஸ்டொய்னிஸ் தவிர காயத்திலிருந்து குணமடைந்த மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், ஸ்கேவியர் பார்ட்லெட் ஆகியோரும் காயத்திலிருந்து குணமடைந்து குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை ஆஷஸ் தொடருக்குத் தயாராகும் பொருட்டு முதற்தரப் போட்டிகளுக்கு முன்னுரிமையளிக்கும் பொருட்டு இத்தொடரை சகலதுறைவீரர் கமரன் கிறீன் தவறவிடவுள்ளார்.

முதற் குழந்தை பிறப்பதன் காரணமாக நாதன் எலிஸும் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

குழாம்: மிற்செல் மார்ஷ் (அணித்தலைவர்), ஷோன் அபொட், ஸ்கேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுஸ், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மற் கூனுமென், கிளென் மக்ஸ்வெல், மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸாம்பா.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .