2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாம்களில் ஓவன்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 31 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியாவின் குழாம்களில் சகலதுறைவீரர் மிற்செல் ஓவன் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் ஓவன் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இதேவேளை ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்கு வேகப்பந்துவீச்சாளர் லான்ஸ் மொரிஸ் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸுக்கு தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் இரண்டு குழாம்களுக்குத் திரும்பியுள்ளனர்.

ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிக்கான தலைவராகவும் மிற்செல் மார்ஷ் செயற்படவுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்த மற் ஷோர்ட்டும் இரண்டு குழாம்களிலும் இடம்பெற்றுள்ளார்.

இருபதுக்கு – 20 குழாம்: மிற்செல் மார்ஷ் (அணித்தலைவர்), ஷோன் அபொட், டிம் டேவிட், பென் டுவார்ஷுஸ், நாதன் எலிஸ், கமரன் கிறீன், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மற் கூனுமென், கிளென் மக்ஸ்வெல், மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், அடம் ஸாம்பா.

ஒருநாள் குழாம்: மிற்செல் மார்ஷ் (அணித்தலைவர்), ஸ்கேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் காரி, பென் டுவார்ஷுஸ், நாதன் எலிஸ், கமரன் கிறீன், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மர்னுஸ் லபுஷைன், லான்ஸ் மொரிஸ், மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், அடம் ஸாம்பா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .