Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு மேலும் நான்கு வெற்றிகளைப் பெறவேண்டியுள்ள நிலையில் இத்தொடர் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இதேவேளை, இப்போட்டியைத் தொடர்ந்து இந்திய அணித்தலைவர் விராட் கோலி இந்தியாவுக்குச் செல்லவுள்ள நிலையில், தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டி இந்தியா காணப்படுகின்றது.
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளராக இரவிச்சந்திரன் அஷ்வினும், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமிக்கு அடுத்தாக உமேஷ் யாதவ்வும், விக்கெட் காப்பாளராக ரித்திமான் சஹாவும், மயங்க் அகர்வாலுடன் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக பிறித்திவி ஷாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கமாக அவுஸ்திரேலிய அணியில் சகலதுறைவீரர் கமரொன் கிறீன் அறிமுகத்தை மேற்கொள்வார் என்பதோடு, அண்மையில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறிவரும் ஜோ பேர்ண்ஸ் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக தனதிடத்தை தக்க வைப்பார் எனக் கருதப்படுகிறது. பேர்ண்ஸோடு ஆரம்பத்துடுப்பாட்டவீரராக மத்தியூ வேட் இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்ர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித் தொடர்பான உடற்றகுதியில் சந்தேகங்கள் காணப்பட்டபோதும் அவரும் இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026