2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்குமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 04 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது, சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தளுவி தொடரை இழந்துள்ள இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு சவால் அளிப்பதற்கே மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில், இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீட், ஒலி றொபின்ஸனை றோறி பேர்ண்ஸ், ஸ்டூவர்ட் ப்ரோட் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், உப அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோரிடத்திடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மறுப்பக்கமாக அவுஸ்திரேலிய அணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ட்ரெவிஸ் ஹெட்டை உஸ்மான் கவாஜாவைப் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X