Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டுனெடினில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, ஆரம்பத்திலேயே டிம் செய்ஃபேர்ட்டை இழந்தது. எனினும், மார்டின் கப்திலின் 97 (50), அணித்தலைவர் கேன் வில்லியம்ஸின் 53 (35) ஓட்டங்களோடு தமது ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தியது. பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், ஜேம்ஸ் நீஷமின் ஆட்டமிழக்காத 45 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 220 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக மத்தியூ வேட் 24 (15), ஜொஷ் பிலிப் 45 (32) ஓட்டங்களைப் பெற்றபோதும், குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கெட்டுகளை இழந்ததுடன், பின்னர் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை மிற்செல் சான்ட்னெரிடம் பறிகொடுத்து தடுமாறியது.
எவ்வாறாயினும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 78 (37), டேனியல் சாம்ஸின் 41 (15) ஓட்டங்கள் மூலம் வெற்றியிலக்கை அவுஸ்திரேலியா நெருங்கி வந்தபோதும், இறுதி ஓவரில் இருவரினதும் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நீஷம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கப்தில் தெரிவானார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026