Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரானது, கெய்ன்ஸில் இன்று காலை 9.50 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சிம்பாப்வேக்கெதிரான தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மீளெழ வேண்டியுள்ளதுடன், குறிப்பாக டேவிட் வோர்னர் தவிர்ந்த ஏனைய துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
இதிலும் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் அதிக கவனம் பெறுகிறார். இத்தொடரிலும் அவர் போர்முக்குத் திரும்பாத சந்தர்ப்பத்தில் அவரின் இறுதித் தொடராக இத்தொடர் அமையக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
மறுபக்கமாக ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூசன் என பலமான பந்துவீச்சு வரிசையுடன் காணப்படும் நியூசிலாந்து அண்மைய காலங்களில் இளம் வீரரான பின் அலெனும், கிளென் பிலிப்ஸ், டரைல் மிற்செல், டெவோன் கொன்வே ஆகியோர் ஓட்டங்களைப் பெறுவதும் அவ்வணிக்குச் சாதகமானதாகக் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025