Shanmugan Murugavel / 2024 நவம்பர் 04 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது மெல்பேணில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
பாகிஸ்தானானது அவுஸ்திரேலியாவுக்கு சவாலை வழங்க வேண்டுமென்றால் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான், சிரேஷ்ட வீரர் பாபர் அஸாமிடமிருந்து வேகமான பெரிய இனிங்ஸ்கள் தேவையாக உள்ளது.
மற்றையது அவுஸ்திரேலியாவின் மற் ஷோர்ட், ஜேக் பிறேஸர்-மக்குர்க் ஆகியோரை நசீம் ஷா, ஹரிஸ் றாஃப், மொஹமட் ஹஸ்னைன், ஷகீன் ஷா அஃப்ரிடி கூட்டணி எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என்பதிலும் இத்தொடரின் முடிவு தங்கியுள்ளது.
தவிர பாகிஸ்தானில் அதிரடி முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்படுமென்ற நிலையில் றிஸ்வானின் தலைமைத்துவம், பெறுபேறுகளும் நிச்சயம் இத்தொடரில் உற்று நோக்கப்படும்.
அவுஸ்திரேலிய அணியில் கமரொன் கிறீன் இல்லாத நிலையில் ஆரோன் ஹார்டி தனதிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago