Shanmugan Murugavel / 2025 ஜூலை 03 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிரெனடாவில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு சவாலளிக்க வேண்டுமாயின் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டவீரர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் வேண்டுமாக இருக்கிறது.
சிரேஷ்ட வீரரான கிறேய்க் பிறத்வெய்ட்டிடமிருந்து பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுவதோடு, பிரெண்டன் சிங்க், கேசி கார்ட்டியிடமிருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபக்கமாக விரல் என்பு முறிவிலிருந்து குணமடைந்த ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய அணியில் ஜொஷ் இங்லிஸை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர அணிகளில் வேறெந்த மாற்றங்களும் இருக்காதெனக் கருதப்படுகின்ற நிலையில், சாம் கொன்ஸ்டாஸ், கமரன் கிறீன் ஆகியோர் துடுப்பாட்டவரிசையில் தமது நிலைகளை நிரூபித்துக் காண்பிக்க வேண்டியுள்ளது.
முதலாவது போட்டியைப் போன்றே இப்போட்டிக்கான ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
44 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago