Shanmugan Murugavel / 2024 ஜூன் 25 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
சென். லூசியாவில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான குழு ஒன்று சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மிற்செல் மார்ஷ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 92 (41), சூரியகுமார் யாதவ்வின் 31 (16), ஷிவம் டுபேயின் 28 (22), ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 27 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜொஷ் ஹேசில்வூட் 4-0-14-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக ட்ரெவிஸ் ஹெட் 76 (43), மார்ஷ் 37 (28), கிளென் மக்ஸ்வெல் 20 (12) ஓட்டங்களைப் பெற்றபோதும் அர்ஷ்டீப் சிங் (3), குல்தீப் யாதவ் (2), அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ராவிடம் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஷர்மா தெரிவானார்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago