Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித்தலைவர் தோமஸ் றியூவின் 110 (107), கலெப் பல்கனரின் 40 (53), பர்ஹான் அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 28 (26), ஜோசப் மூர்ஸின் 25 (33), பென் மேய்ஸின் 24 (33), றல்பை அல்பேர்ட்டின் 15 (13), செபஸ்டியன் மோர்கனின் 15 (22) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஹெய்டன் ஷில்லர் 2, நடென் கூரே 2, அர்யன் ஷர்மா, வில் பைரொம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு 278 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக அணித்தலைவர் ஒலிவர் பீக் 100 (88), நிதிஷ் சாமுவேல் 47 (83), அர்யன் ஷர்மா 34 (23), ஹெய்டன் ஷில்லர் 15 (13), வில் மலஜ்சுக் 15 (12), ஜேடன் ட்ரேப்பர் 12 (17) ஓட்டங்களைப் பெற்றபோதும் 47.3 ஓவர்களில் 250 ஓட்டங்களையே பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஜேம்ஸ் மின்டோ 2, செபஸ்டியன் மோர்கன் 2, றல்பை அல்பேர்ட் 2, மனி லும்ஸ்டென் 2, பர்ஹான் அஹ்மட், அலெக்ஸ் பிரெஞ்ச் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக தோமஸ் றியூ தெரிவானார்.
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago