2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவை வெல்லுமா மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 25 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியாவுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, பார்படோஸில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் சவாலளிக்க வேண்டுமானால் கிறேய்க் பிறத்வெய்ட், அணித்தலைவர் றொஸ்டன் சேஸ், ஷே ஹோப், கேசி கார்ட்டி, ஜஸ்டின் கிரேவ்ஸ் உள்ளிட்டோர் பெரிய இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது.

மறுபக்கமாக ஸ்டீவன் ஸ்மித் காயமடைந்துள்ளதுடன், மர்னுஸ் லபுஷைன் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சாம் கொன்ஸ்டாஸ் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கடப்பாடு காணப்படுவதுடன், ஜொஷ் இங்லிஷ் தனதிடத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

இதேவேளை ஜொஷ் ஹேசில்வூட்டுக்குப் பதிலாக மற் கூனுமென் விளையாடக்கூடிய வாய்ப்பு காணப்படுவதுடன், சில வேளைகளில் அவரை ஸ்கொட் போலண்ட் பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

இதுதவிர அண்மைக்காலமாக ஓட்டங்களைப் பெற உஸ்மான் கவாஜா தடுமாறுகின்ற நிலையில் தனதிடத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர் காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X