Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸார்பைஜான் குரான் பிறீயை நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் வென்ற நிலையில், பந்தயத்தை ஐந்தாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த வில்லியம்ஸின் கார்லோஸ் சைன்ஸ் ஜூனியர் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 324 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மக்லரன் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி காணப்படுகின்றார். 299 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பியாஸ்திரியின் சக மக்லரன் அணி ஓட்டுநரான லான்டோ நொரிஸ் காணப்படுவதோடு, 255 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நெதர்லாந்தின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
19 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
9 hours ago