Shanmugan Murugavel / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 2ஆவது நாள், மழை காரணமாகப் பாதிக்கப்பட்டதாக அமைந்தது. 2ஆவது நாளில், 11.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்படக்கூடியதாக அமைந்தது.
6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களுடன் 2ஆவது நாளை ஆரம்பித்த கார்லொஸ் பிறெத்வெய்ட், 71 பந்துகளில் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டினேஷ் ராம்டின், 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்படுகிறார். முன்னதாக, கிறெய்க் பிறெத்வெய்ட், 85, டெரன் பிராவோ 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட், ஸ்டீவ் ஓப்கீ இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
15 minute ago
20 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
2 hours ago
5 hours ago