Editorial / 2025 மே 29 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 3ஆவது நாளான வியாழக்கிழமை (29) காலை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை மெத்மி ரசாரா விஜேசூரிய தேசிய சாதனையுடன் 7ஆம் இடத்தைப் பெற்றார். இந்த போட்டிகள் தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகிறது.
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள், 21.62 செக்கன்களில் நிறைவுசெய்த ரசாரா, 33 நிமிடங்கள், 39 செக்கன்கள் என்ற தனது முந்தைய சொந்த தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசகஸ்தான் வீராங்கனை டெய்சி ஜெப்கெமெய் (30:48.44) தங்கப் பதக்கத்தையும் ஜப்பான் வீராங்கனைகளான ரிரிக்கா ஹிரோனாக்கா (30:56.32) வெள்ளிப் பதக்கத்தையும் மிக்குனி யாதா (31:12.21) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இப் போட்டி புதன்கிழமை (28) மாலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கடும் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு, வியாழக்கிழமை (29) காலை மீண்டும் நடத்தப்பட்டது.

46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago