2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஆசியக் கிண்ணக் குழாமில் கில்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் அக்ஸர் பட்டேலை உப அணித்தலைவராக பிரதியிட்டு ஷுப்மன் கில் மீள்வருகையைப் புரிந்துள்ளார்.

இதேவேளை ஜிதேஷ் ஷர்மாவும் குழாமில் இடம்பெற்ற நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

ஹர்ஷித் ரானா குழாமில் இடம்பெற்ற நிலையில் பிரசீத் கிருஷ்ணா, வொஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரேல், யஷஸ்வி ஜைஸ்வால் ஆகியோர் மேலதிக வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

குழாம்: சூரியகுமார் யாதவ் (அணித்தலைவர்), ஷுப்மன் கில் (உப அணித்தலைவர்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் டுபே, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் ஷர்மா, அக்ஸர் பட்டேல், ரிங்கு சிங்க், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்டீப் சிங்க், வருண் சக்கரவர்த்தி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .