Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற பாகிஸ்தான் உடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். பாகிஸ்தான் சார்பாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே அணித்தலைவர் பாபர் அஸாமை புவ்னேஷ்வர் குமாரிடம் இழந்ததுடன், பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் பக்கர் ஸமனை ஆவேஷ் கானிடம் இழந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஹர்டிக் பாண்டியாவிடம் 28 (22) ஓட்டங்களுடன் இஃப்திஹார் அஹ்மட்டை இழந்த பாகிஸ்தான், 43 (42) ஓட்டங்களுடன் மொஹமட் றிஸ்வான், குஷ்டில் ஷாவை அடுத்தடுத்து பாண்டியாவிடம் இழந்தது.
சிறிது நேரத்தில் குமாரிடம் ஆசிஃப் அலி வீழ்ந்ததுடம், தொடர்ந்து அர்ஷ்டீப் சிங்கிடம் மொஹமட் நவாஸ் வீழ்ந்திருந்தார். பின்னர் குமாரிடம் ஷடாப் கான், நசீம் ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததுடன், ஹரிஸ் றாஃப் ஆட்டமிழக்காமல் 13 (07) ஓட்டங்களைப் பெற்றதுடன், சிங்கிடம் இறுதி விக்கெட்டாக வீழ்ந்த ஷஹ்னவாஸ் டஹானியின் 16 (06) ஓட்டங்களுடன் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.
பதிலுக்கு 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா முதலாவது ஓவரிலேயே ஷாவிடம் லோகேஷ் ராகுலை இழந்தது. குறிப்பிட்ட நேரத்தில் ஷர்மா, 35 (34) ஓட்டங்களைப் பெற்ற விராட் கோலியை அடுத்தடுத்து மொஹமட் நவாஸிடம் இழந்தது. பின்னர் சூரியகுமார் யாதவ்வும் நசீம் ஷாவிடம் வீழ்ந்திருந்தார்.
இந்நிலையில், இரவீந்திர ஜடேஜாவின் 35 (29), பாண்டியாவின் ஆட்டமிழக்காத 33 (17) ஓட்டங்களுடன் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை இந்தியாவடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பாண்டியா தெரிவானார்.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026