Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரராக, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் றொபேர்ட் லெவன்டோஸ்கி தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், சிறந்த பயிற்சியாளராக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் ஜுர்ஜன் க்ளொப் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, சிறந்த கோல் காப்பாளராக பயேர்ண் மியூனிச்சின் மனுவல் நோயர் தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான சண் ஹெயுங்-மின்னால் பேர்ண்லிக்கெதிராக கடந்தாண்டு தனித்து பெற்ற கோலானது சிறந்த கோலாகத் தெரிவாகியுள்ளது.
சிறந்த அணி பின்வருமாறு:
கோல் காப்பாளர்; அலிஸன் (லிவர்பூல்)
பின்களவீரர்கள்: ட்ரென்ட் அலெக்ஸான்டர்-ஆர்னோல்ட், வேர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்), சேர்ஜியோ றாமோஸ் (றியல் மட்ரிட்), அல்போன்ஸோ டேவிஸ் (பயேர்ண் மியூனிச்).
மத்தியகளவீரர்கள்: ஜோஷுவா கிம்மிச் (பயேர்ண் மியூனிச்), கெவின் டி ப்ரூனே (மன்செஸ்டர் சிற்றி), தியாகோ (லிவர்பூல்)
முன்களவீரர்கள்: லியனல் மெஸ்ஸி (பார்சிலோனா), லெவன்டோஸ்கி, கிறிஸ்டியானோ ரொனால்டோ (ஜுவென்டஸ்).
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago