Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வா, ஆபத்து நிலையைத் தாண்டிவிட்டதாகவும் அவருக்குப் பாரிய பாதிப்பேதும் ஏற்பட்டிருக்கவில்லையெனவும் அறிவிக்கப்படுகிறது.
பல்லேகெலயில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நேற்று தலையில் தாக்கப்பட்ட கௌஷால் சில்வா, கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார்.
கொழும்பில் வைத்து அவருக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லையென அறிவிக்கப்படுகிறது. எனினும், குறைந்தது ஒரு வாரத்துக்காவது, அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காப்பாற்றிய தலைக்கவசம்
கௌஷால் சில்வாவில் தலைப்பகுதியில் மிக வேகமாகப் பந்து தாக்கிய போதிலும், அவர் அணிந்திருந்த நவீனரக தலைக்கவசமே, அவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றியதாக, அவருடன் விளையாடிய வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
டினேஷ் சந்திமால் அடித்த அப்பந்து, நவீனரக தலைக்கவசங்களில் காணப்படும் மேலதிக பாதுகாப்பைத் தாண்டியே அவரைத் தாக்கியதாகவும், பிலிப் ஹியூஸின் மரணத்தின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மேலதிக பாதுகாப்பு இல்லாதிருந்தால், கௌஷால் சில்வாவுக்கான பாதிப்பு அதிகமாக இருந்திருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துக்குச் செல்லவுள்ள இலங்கை அணி, அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடுவதற்காக பல்லேகெலவில் இரண்டுநாள் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் கௌஷால் சில்வா, சதமொன்றையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago