Shanmugan Murugavel / 2024 ஜூன் 18 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென். லூசியாவில் தற்போது முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தானுடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், நிக்கலஸ் பூரானின் 98 (53), ஜோன்சன் சார்ள்ஸின் 43 (27), அணித்தலைவர் றொவ்மன் பவலின் 26 (15), ஷே ஹோப்பின் 25 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், குல்படின் நைப் 2-0-14-2, நூர் அஹ்மட் 4-0-20-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 219 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், அகீல் ஹொஸைன் (2), குடகேஷ் மோட்டி (2), ஒபெட் மக்கோய் (3), அல்ஸாரி ஜோசப், அன்ட்ரே ரஸலிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களையே பெற்று 104 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் இப்ராஹிம் ஸட்ரான் 38 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக பூரான் தெரிவானார்.
16 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago