2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார்.
இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார்.

இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் சபை, தற்போது, உத்தியோகபூர்வமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், நியூசிலாந்து இரசிகரொருவர், ஆமிரை நோக்கிப் பணத்தையும் நகையையும் காண்பித்ததாக அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .