Shanmugan Murugavel / 2016 ஜனவரி 07 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது.
அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற நிலை காணப்பட்டது.
ஆனால், நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஆமிரின் காரணம் காரணமாக, அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago