Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், டொட்டேன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றது. இப்போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணி சார்பாக, போட்டியின் 29ஆவது, 32ஆவது நிமிடங்களில் இளம் வீரர் மார்க்கஸ் ரஷ்ஃபோர்ட் பெற்ற கோல்களின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் 40ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் டனி வெல்பக் ஒரு கோலைப் பெற்றார். எனினும் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மார்க்கஸ் ரஷ்ஃபோர்ட்டிடமிருந்து பந்தைப் பெற்ற அன்ரூ ஹெரேரா, அதைக் கோலாக்கி மீண்டும் யுனைட்டெட்டுக்கு இரண்டு கோல்கள் முன்னிலையை வழங்கினார். அடுத்த நான்காவது நிமிடத்தில் ஆர்சனலின் மெசூத் ஒஸில் ஒரு கோலினைப் பெற்று ஆர்சனலுக்கு நம்பிக்கையை வழங்கினார். இருந்தபோதும் அதன்பிறகு இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாதநிலையில் யுனைட்டெட் வெற்றி பெற்றது.
2004ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்றாத ஆர்சனல், இப்போட்டியின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள லெய்செஸ்டரை விட ஐந்து புள்ளிகள் குறைவாகப் பெற்று மூன்றமிடத்தில் நீடிக்கும் அதேவேளை, 44 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.
இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பின்னர், பிறீமியர் லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானமான ஓல்ட் ட்ராப்ஃபோர்ட்டில் வைத்து மன்செஸ்டர் யுனைட்டெட்டை ஆர்சனல் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடம்பெற்ற ஏனைய போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் சுவான்சீயை டொட்டேன்ஹாம் தோற்கடித்திருந்தது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago