Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், ஆர்சனல் அணி வெற்றி பெற்றதுடன் செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஆர்சனல், பௌர்ண்மௌத் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. இதில், போட்டியின் 23ஆவது நிமிடத்தில் மெசூட் ஒஸில் ஒரு கோலைப் பெற்றதுடன் போட்டியின் 24ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின் ஒரு கோலைப் பெற்றார். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 48 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், பிறீமியர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப்பட்டியலில் டொட்டேன்ஹாமுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளது.
இதேவேளை, செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றிருந்தநிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 61ஆவது நிமிடத்தில் ஜெஸி லிங்கார்ட் பெற்றிருந்தார். செல்சி சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் இறுதி நிமிடங்களில் டியகோ கோஸ்டா பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .