2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆரம்ப லீக் போட்டிகளைத் தவறவிடவுள்ள றொட்றி

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன கழக உலகக் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட பாரிய காயத்திலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான றொட்றி குணமடைந்து வருவதாகவும் ஆதலால் புதிய பிறீமியர் லீக் பருவகாலத்தின் ஆரம்ப கட்டங்களில் அவரின் விளையாடும் நேரம் மட்டுப்படுத்தப்படுமென சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.

காயத்தின் விடயங்களை குவார்டியோலா வெளிப்படுத்தாதபோதும் 29 வயதான றொட்றி, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியிலேயே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் றொட்றிக்கு அடிவயிற்றுப் பகுதி காயமொன்று ஏற்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .