Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முன்களவீரரான பியர்-எமெரிக் உபமெயாங்கை அடுத்த மாதம் கைச்சாத்திடுவதை நோக்கி இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் நகருவதாகக் கூறப்படுகிறது.
ஆர்சனலுடன் 32 வயதான உபமெயாங்க் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றபோதும், ஒழுக்கப் பிரச்சினைகள் காரணமாக அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்ததுடன், அணியிலும் இடம்பெற்றிருக்கவில்லை.
அந்தவகையில், ஆர்சனலிலிருந்து உபமெயாங்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பருவகால முடிவிலேயே உபமெயாங்கை ஆர்சனல் வெளியேற அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆர்சனலுக்காக 128 போட்டிகளில் விளையாடி 68 கோல்களை உபமெயாங்க் பெற்றுள்ளார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago