Shanmugan Murugavel / 2026 ஜனவரி 26 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், ஆர்சனலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக பிறையன் எம்புமோ, பற்றிக் டோர்கு, மதெயுஸ் குன்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்சனல் சார்பாக மைகல் மெரினோ ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-0 என்ற கோல் கணக்கில் அஸ்தன் வில்லா வென்றது. வில்லா சார்பாக எமி புயென்டியா, ஒலி வட்கின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 46 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றியும், வில்லாவும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாமிடங்களில் காணப்படுகின்றன. 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago