Shanmugan Murugavel / 2025 ஜனவரி 01 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது நாளை (02) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், இலங்கையின் மத்திய வரிசை தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டுகளை இழந்தமை கவனம் பெறுகின்றது.
அதுவும் மோசமாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் செயற்பட்ட அவிஷ்க பெர்ணாண்டோ இரண்டாவது போட்டியில் பானுக ராஜபக்ஷவைப் பிரதியிட்டமை விமர்சனத்தைச் சந்தித்தது.
அந்தவகையில் தொடர்ந்து இரண்டு தொடர்களாக இலங்கைக் குழாமில் இடம்பெற்று பதினொருவர் அணியில் இடம்பெறாத தினேஷ் சந்திமாலுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். தவிர சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்க அணியில் உள்வருவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் தொடர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குழாமிலுள்ள நாதன் ஸ்மித், பெவோன் ஜேக்கப்ஸ் ஆகியோருக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைக்கலாம்.
26 minute ago
29 minute ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
22 Jan 2026