2026 ஜனவரி 10, சனிக்கிழமை

ஆஷஸ் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 08 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வென்றதுடன், நான்காவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பித்து வியாழக்கிழமை (08) முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றமையையடுத்தே 4-1 என்ற ரீதியில் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 384/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 160, ஹரி ப்றூக் 84 ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் நேஸர் 4/60, ஸ்கொட் போலண்ட் 2/85, மிற்செல் ஸ்டார்க் 2/93, மர்னுஸ் லபுஷைன் 1/14, கமரன் கிறீன் 1/85)

அவுஸ்திரேலியா: 567/10 (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 163, ஸ்டீவன் ஸ்மித் 138, பியூ வெப்ஸ்டர் ஆ.இ 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங் 3/97, பிறைடன் கார்ஸ் 3/130, பென் ஸ்டோக்ஸ் 2/95, வில் ஜக்ஸ் 1/34, ஜேக்கப் பெத்தெல் 1/52)

இங்கிலாந்து: 342/10 (துடுப்பாட்டம்: ஜேக்கப் பெத்தெல் 154 ஓட்டங்கள். பந்துவீச்சு: பியூ வெப்ஸ்டர் 3/64, மிற்செல் ஸ்டார்க் 3/72, ஸ்கொட் போலண்ட் 2/46, மைக்கல் நேஸர் 1/55)

அவுஸ்திரேலியா: 161/5 (31.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங் 3/42, வில் ஜக்ஸ் 1/42)

போட்டியின் நாயகன்: ட்ரெவிஸ் ஹெட்

தொடரின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .