2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

ஆஷஸ் மீள் அழைப்பை நெருங்கும் லபுஷைன்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாஸ்மானியாவுக்கெதிரான அவுஸ்திரேலியாவின் முதற்தரப் போட்டியான ஷெஃபீல் ஷீல்ட் போட்டியில் குயின்ஸ்லாந்துக்காக 160 ஓட்டங்களைப் பெற்ற மர்னுஸ் லபுஷைன் ஆஷஸுக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதில் ஒரு அடியை எடுத்து வைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான அவுஸ்திரேலியக் குழாமிலிருந்து லபுஷைன் நீக்கப்பட்ட நிலையில் ஆரம்பத் துடுப்பெடுத்தாட்டவீரராகக் களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் நியூ சவுத் வேல்ஸுக்காக மீண்டும் ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

லபுஷைனின் 160 ஓட்டங்களில் தவறுகள் இருந்திருந்தபோதும் இந்த இனிங்ஸை தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி பார்வையிட்டிருந்தார். 61, 98 ஓட்டங்களில் லபுஷைனின் ஆட்டமிழக்கும் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தன்னை மீளக் கட்டியெழுப்ப ஸ்டீவ் ஸ்மித் உதவியதாக லபுஷைன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .