2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆஸிக்கு எதிராக முன்னிலையில் பங்களாதேஷ்

Editorial   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல்நாள் முடிவில், இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, சிறியளவு முன்னிலையைப் பெற்றுள்ளது.

டாக்காவில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

முதல் 3 விக்கெட்டுகளையும் 10 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, தடுமாறுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 4ஆவது விக்கெட்டுக்காக 155 ஓட்டங்களை, தமிம் இக்பாலும் ஷகிப் அல் ஹஸனும் பகிர்ந்து, அவ்வணிக்கு முன்னிலையைக் கொடுத்தனர். இறுதியில் அவ்வணி, 260 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஷகிப் அல் ஹஸன் 84, தமிம் இக்பால் 71 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பற் கமின்ஸ், நேதன் லையன், அஸ்டன் ஏகர் மூவரும், தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

எதிரணியை இலகுவாக வீழ்த்திவிட்ட நம்பிக்கையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, நேற்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 18 ஓட்டங்களுடன் தடுமாறி வருகிறது.

டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, நேதன் லையன் ஆகியோர், ஏற்கெனவே ஆட்டமிழந்த வீரர்களாவர். உஸ்மான் கவாஜா, ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற் றென்ஷோவும் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும், களத்தில் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சில் மெஹெடி ஹஸன் மிராஸ், ஷகிப் அல் ஹஸன் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .