Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் டரைல் மிற்செல்லை நோக்கி பந்தை எறிந்த இந்தியாவின் அர்ஷ்டீப் சிங்க்குக்கு கிரிக்கெட் சபை செவ்வாய்க்கிழமை (10) தண்டப்பணம் அறவிட்டுள்ளது.
அர்ஷ்டீப் வீசிய பந்தை அவரிடமே மிற்செல் செலுத்திய நிலையில் அவர் அதை மிற்செல்லை நோக்கி எறிய அது அவரது கால்காப்பு மட்டைகளில் பட்டிருந்தது. இதனையடுத்து கோபமடைந்த மிற்செல் அர்ஷ்டீப்பை நோக்கிச் சென்ற நிலையில், அவர் மன்னிப்புக் கோராமல் தனது பந்துவீசுமிடத்துக்கு திரும்பிய நிலையில் நடுவர் தலையிட்டிருந்தார். இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் பந்தை வீரரொருவருக்கு அருகில் பொருத்தமற்ற/அபாயகரமான ரீதியில் எறியும் நடத்தை விதிகளை மீறியதால் அர்ஷ்டீப்புக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஓவரின் முடிவிலும் போட்டியின் முடிவிலும் மிற்செல்லிடம் அர்ஷ்டீப் மன்னிப்புக் கோரியிருந்தார்.
16 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago