Shanmugan Murugavel / 2026 மார்ச் 05 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை நடப்புச் சம்பியன்களான இந்தியா எதிர்கொள்கிறது.
குழுநிலைப் போட்டிகளில் தடுமாறியபோதும் வில் ஜக்ஸும் ஒரு போட்டியில் அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் பங்களிப்பில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள இங்கிலாந்து அணியாக லியம் டோஸன், அடில் ரஷீட், ஜொஃப்ரா ஆர்ச்சரின் பங்களிப்புகளென ஆபத்தானதாகவே காணப்படுகிறது.
இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி ஜொஸ் பட்லர், பில் ஸோல்ட்டின் பங்களிப்பின்மை அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது.
மறுபக்கமாக இந்திய அணியில் அபிஷேக் ஷர்மாவின் எதிர்பார்த்த பெறுபேறு இல்லாமை பின்னடைவாகக் காணப்படுவதுடன் கடந்த இரண்டு போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தியை எதிரணிகள் ஆக்கிரமிப்பதும் அவரின் திட்டங்களை அவர் மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago