Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கெதிரான தீர்க்ககரமான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவை சரித் அசலங்க பிரதியிட்டிருந்தார். நியூசிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஜிம்மி நீஷமை கோல் மக்னோச்சி பிரதியிடவுள்ளார்.
இலங்கை: 1. பதும் நிஸங்க, 2. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 3. சரித் அசலங்க, 4. பவன் ரத்னாயக்க, 5. தசுன் ஷானக (அணித்தலைவர்), 6. கமிந்து மென்டிஸ், 7. டுனித் வெல்லலாகே, 8. டுஷான் ஹேமந்த, 9. டுஷ்மந்த சமீர, 10. மகேஷ் தீக்ஷன, 11. டில்ஷான் மதுஷங்க.
நியூசிலாந்து: 1. டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), 2. பின் அலென், 3. றஷின் றவீந்திர, 4. கிளென் பிலிப்ஸ், 5. மார்க் சப்மன், 6. டரைல் மிற்செல், 7. மிற்செல் சான்ட்னெர் (அணித்தலைவர்), 8. கோல் மக்னோஞ்சி, 9. மற் ஹென்றி, 10. இஷ் சோதி, 11. லொக்கி பெர்கியூசன்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago