Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் நாயகனாக இந்தியாவின் சஞ்சு சாம்சன் தெரிவானார்.
இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய சாம்சன், 100 பந்துகளுக்கு 199.37 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 321 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதில் காலிறுதிப் போட்டி போன்று அமைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டி, அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என தொடராக மூன்று விலகல் முறையாக அமைந்த போட்டிகளிலும் அதிரடியாக அரைச்சதங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றிகளுக்கு பங்களித்திருந்தார்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான தொடரைத் தொடர்ந்து தான் உடைந்ததாகவும் தனது கனவுகள் முழுமையாகத் தகர்ந்ததாகத் தெரிவித்த சாம்சன், கடந்த இரண்டு மாதங்களாக சச்சின் டென்டுல்கருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாகவும் பெரிய பெரிய கலந்துரையாடல்களைக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
59 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
01 May 2026