Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
குழு டியில் ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தை வென்ற நியூசிலாந்து, சென்னையில் தற்போது முடிவுக்கு வந்த கனடாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதுதவிர இக்குழுவிலிருந்து தென்னாபிரிக்கா ஏற்கெனவே சுப்பர் – 8 சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகியன தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கனடாவின் அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
உடல்நலமின்மை காரணமாக இப்போட்டியில் நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் விளையாடாத நிலையில், டரைல் மிற்செல் அணிக்குத் தலைமை தாங்கியதுடன் சான்ட்னெரை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான கோல் மக்கொஞ்சி பிரதியிட்டிருந்தார். இது தவிர லொக்கி பெர்கியூசனை கைல் ஜேமிஸன் பிரதியிட்டிருந்தார்.
நியூசிலாந்துக் குழாமுடன் பயணித்த மக்கொஞ்சி, திங்கட்கிழமையே (16) மிஷெல் பிறேஸ்வெல்லை குழாமில் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா, யுவ்ராஜ் சம்ராவின் 110 (65), அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் 36 (39) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4-0-25-1, மற் ஹென்றி 4-0-28-1, கிளென் பிலிப்ஸ் 1-0-6-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 76 (36), றஷின் றவீந்திரவின் ஆட்டமிழக்காத 59 (39) ஓட்டங்களோடு 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பிலிப்ஸ் தெரிவானார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026