Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது முடிவுக்கு வந்த நமீபியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, இஷன் கிஷனின் 61 (24), ஹர்திக் பாண்டியாவின் 52 (28), திலக் வர்மாவின் 25 (21), ஷிவம் டுபேயின் 23 (16), சஞ்சு சாம்சனின் 22 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் 4-0-20-4 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 210 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நமீபியா, அர்ஷ்டீப் சிங், வருண் சக்கரவர்த்தி (3), அக்ஸர் பட்டேல் (2), ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா (2), ஷிவம் டுபேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்று 93 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. லெளரன் ஸ்டீன்கம்ப் 29 (20), ஜான் பிறைலிங்க் 22 (15), எரஸ்மஸ் 18 (11) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக ஹர்திக் தெரிவானார்.
12 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago