Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வயிற்றுத் தொற்றொன்றால் வைத்தியசாலையில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான அபிஷேக் ஷர்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் வியாழக்கிழமை (12) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள நமீபியாவுக்கெதிரான இந்தியாவின் குழு ஏ போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக வைத்தியசாலையில் அபிஷேக் காணப்படுகின்ற நிலையில், செய்தி எழுதப்படும் வரையில் அவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
அபிஷேக் ஷர்மாவை குறித்த போட்டியில் சஞ்சு சாம்சன் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய அமெரிக்காவுக்கெதிரான இந்தியாவின் ஆரம்பப் போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடியிருக்காத ஜஸ்பிரிட் பும்ரா, நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார்.
13 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
1 hours ago