Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 06 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால குழு இன்று முதல் செயல்படும்.
மேலும் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அர்ஜுன ரணதுங்கவுக்கு மேலதிகமாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ மற்றும் ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
4 hours ago