Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மன்செஸ்டரில் இடம்பெற்றஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலகுவாக வெற்றியீட்டியது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 37(26), ஜேஸன் றோய் 21(20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வஹாப் றியாஸ் மூன்று, இமாட் வஸீம், ஹஸன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 136 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, ஷர்ஜீல் கான் 59(36), காலிட் லத்தீவ் ஆட்டமிழக்காமல் 59 (42) ஓட்டங்களைப் பெற்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை அடில் ரஷீட் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக வஹாப் றியாஸ் தெரிவானார்.
32 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago