Shanmugan Murugavel / 2016 ஜூன் 01 , மு.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில், தன்னால் பங்குபற்ற முடியாது என, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்தமுடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இங்கிலாந்துக்கெதிரான 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியொன்று, அயர்லாந்துக்கெதிரான 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றிலேயே அவர் பங்குபெற மாட்டார்.
டில்ஷானின் இந்த இழப்பு, இலங்கை அணிக்கு மிகப்பெரும் பாதிப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கைக்காக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷான், 2015ஆம் ஆண்டில், 52.47 என்ற சராசரியில் 1,207 ஓட்டங்களைக் குவித்திருந்திருந்தார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இந்தத் தொடரில், ஊக்கமருந்துக் குற்றச்சாட்டில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு, தற்போது அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள குசால் ஜனித் பெரேரா பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அவருக்கான ஜோடியொருவரைத் தேட வேண்டிய நிலை, சனத் ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .