2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனல் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மே 01 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளில், ஆர்சனல், வெஸ்ட் ஹாம், வட்போர்ட், நியூகாசில், எவெர்ற்றன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, ஸ்டோக், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்சனல், நோர்விச் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், டனி வெல்பக் பெற்ற கோலின் உதவியுடன் 1-0 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியுடன் சேர்த்து 750 பிறீமியர் லீக் போட்டிகளுக்கு ஆர்சனலின் பயிற்சியாளராக பணியாற்றிய ஆர்சன் வெங்கர், கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து ஆர்சனலின் பயிற்சியாளர் பதவியிலிருந்து வருகையில், அவர் பதவி விலக வேண்டுமென அவ்வணியின் இரசிகர்கள், மைதானத்தின் வெளியேயும் உள்ளேயேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 3-0 என்ற கோல்கணக்கில் வெஸ்ட் ஹாம், வெஸ்ட் புரோமை தோற்கடித்ததுடன், 3-2 என்ற கோல்கணக்கில் அஸ்டன் வில்லாவை வட்போர்ட் தோற்கடித்திருந்ததுடன் 1-0 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸை நியூகாசில் தோற்கடித்திருந்ததுடன் 2-1 என்ற கோல்கணக்கில் பௌர்ண்மௌத்தை எவெர்ற்றன் தோற்கடித்ததுடன் ஸ்டோக், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .